Monday 25 March 2013

பேய்க் கூட்டம்-பாரதி

இன்று இரவு இன்னும் தூக்கம் வரவில்லை. தூக்கம் வராத நள்ளிரவில் "என்ன செய்யலாம்" என யோசித்து நண்பர் கொடுத்த புத்தகத்தை எடுத்தேன். தன் அட்டையை இழந்து நிர்வாணமாய் நின்ற அந்த புத்தகத்தின் நிர்வாணதிற்குள் சென்று ரசிக்கத் தொடங்கினேன்.

சிறுகதையின் சரித்திரம் முதலில் விளக்கி இருந்தார்கள். மேலை நாடுகளில் இருந்து கொண்ட வரப்பட்ட புதிய தமிழ் இலக்கிய வகை தான் சிறுகதை. இன்னும் 100 அகவை கூட ஆகவில்லை, இந்த இலக்கிய வகைக்கு. புதுமைப்பித்தன், தம் கட்டுரையொன்றில் தமிழ்ச் சிறுகதையின் தந்தை வ.வே.சு ஐயர் என்று குறிப்பிட்டதால், அந்த கருத்தே பரவலாக பரவிவிட்டது. உண்மையில், அவருக்கு முன்னமே பாரதியார் சிறுகதைத் தன்மையுள்ள கதைகளை எழுதியுள்ளார் எனவும். அவருடைய சிறுகதை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்கள். சிதைந்து போகக் கூடிய நிலையில் உள்ள அந்த புத்தக்கத்தில் உள்ள கதையை எடுத்து இணையத்தில் போட்டால் பலருக்கும் சென்றடையும், கதையும் அழியாமல் வாழுமே என இந்த பின்னிரவில் இந்த பதிவை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

சரி இதற்கு மேல் உங்களை காக்க வைக்க விருப்பமில்லை.. படமாக எடுத்து போட்டுள்ளேன்.படிங்க...















படிச்சாச்சா? வேடிக்கை என்னவென்றால்... பாரதியும் தூக்கம் வரா இரவில் புத்தகம் படிப்பதை பற்றியே இந்த கதையின் ஒரு பாதியில் விளக்கியுள்ளார்.ஹா ஹா.  :-) ஏதோ உருப்படியா ஒரு வேலை செய்த திருப்தி...

நன்றி,
ச.சக்திவேல்



6 comments:

  1. நானும் தூக்கம் வராத ஒரு இரவில் படித்து விட்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ :-)

    ReplyDelete
    Replies
    1. நானும் தான். நன்றி சகோ :-)

      Delete
  2. எனக்கு வேதியியல்(chemistry) தவிற எந்த புத்தகத்தை படிதாலும் வரும் தூக்கமும் போய்விடும்...

    ReplyDelete
    Replies
    1. தவி'ர' எ.பி அவ்வ்வ்வ்.. எனக்கும் இப்ப எல்லாம் அப்படி தான்... பாருங்க.. அதை வச்சி ஒரு பதிவு எழுதுற அளவு தூக்கம் போச்சு... :)) நன்றி :-)

      Delete
  3. பழைய தமிழ்! படிக்கவே சுவையாக உள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி :-)கதை எனக்கு ரொம்பப் பிடித்தது :-)

    mas32

    ReplyDelete